முகக்கவசங்களிலும் மோசடி- ஒருவர் கைது.

கொழும்பில் தரமற்ற முகக்கவசங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

சுமார் 36000 முகக்கவசங்களே இவ்வாறு நுகர்வோர் அதிகார சபையினரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

இந்த முகக்கவசங்கள் இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு புறக்கோட்டை பகுதியில் வைத்து விற்பனை செய்யப்பட்டுள்ளன.

பொதி செய்யப்பட்ட நிலையில் மருந்தகங்களில் விற்பனையாகும் முகக்கவசங்களை மாத்திரம் பயன்படுத்துமாறு ஏற்கனவே சுகாதார அமைச்சு அறிவித்திருந்தது.

எனினும் கொரொனாவைரஸ் பரவல் பீதியை அடுத்து புறக்கோட்டையின் வீதிப்பகுதியிலும் இந்த முகக்கவசங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

இந்தநிலையில் குறித்த முகக்கவசங்களை விற்பனை செய்தவர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.

இதேவேளை நுகர்வோர் அதிகாரசபை சோதனையிட்ட 252 மருந்தகங்களில் 19 இல் அரசாங்கத்தின் ஆகக்கூடிய விலையிலும் பார்க்க அதிக விலைக்கு முகக்கவசங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

,

Related posts