தமிழ் பெண்ணுக்கு தாயாக மாறிய கிழக்கு ஆளுநர்.

நேற்று கொக்கட்டிச்சோலை தாண்தோன்றி ஈஸ்வரர் ஆலய வழிபாட்டிற்காக கிழக்கு மாகாண ஆளுநர் சென்றிருந்தார்.

அப்போது எதிர் பாராத விதமாக இடம் பெற்ற தமிழ் பெண்ணின் திருமண நிகழ்வு ஒன்று நடைபெற்றுக்கொண்டிருந்தது.

அப்போது திருமணம் தொடர்பில் ஆளுநர் கேட்டறிந்த போது, திருமண பந்தத்தில் இணையவிருந்த மணப்பெண்ணுக்கு தாய் இல்லையென தெரியவந்தது.

இதனையடுத்து அந்த மணப்பெண்ணின் தாய் ஸ்தானத்திலுருந்து குறித்த திருமணத்தை நடத்தி வைத்திருந்ததாக சமூக வலைத்தளங்களில் தகவல்கள் பகிரப்பட்டு வருகின்றன.

Related posts