சீன பெண் தேறி வருகிறார்

சீகொரோனவைரஸினால் பாதிக்கப்பட்ட சீன பெண் உடல்நிலை தேறி வருகிறார். இவர் தற்போது ஐடிஎச் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

சுற்றுலா வந்த நிலையில் அவர் கொரோனவைரஸால் பாதிக்கப்பட்டிருந்தமை கண்டுபிடிக்கப்பட்டது.

இதனை அடுத்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அவர் தற்போது தேறி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெரும்பாலும் அவர் விரைவில் வைத்தியசாலையில் இருந்து விடுவிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதேவேளை இந்த தொற்று இருக்கலாம் என்று சந்தேகத்தில்  சிகிச்சை பெற்று வரும் மேலும் 12 பேருக்கு கொரோனவைரஸ் இருப்பது உறுதிப்படுத்தப்படவில்லை. 

Related posts