சீனர்கள் புறக்கணிக்கப்படுவது தொடர்பில் உத்தியோகபற்றற்ற முறைப்பாடு

சீன நாட்டவர்கள் இலங்கையில் புறக்கணிக்கப்பட்ட சில சம்பவங்கள் குறித்து சீன அதிகாரிகள் உத்தியோகபூர்வமற்ற வகையில் இலங்கை அரசாங்கத்தின் கவனத்துக்கு கொண்டு வந்துள்ளனர்.

கொரொனவைரஸை கொண்டிருக்கிறார்கள் என்ற சந்தேகத்தின்பேரில் பொது உணவகங்களில் மற்றும் ஏனைய மக்கள் கூடும் இடங்களில் இருந்து தவிர்க்கப்பட்டமை கவலையளிப்பதாக சீன அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

இந்த பிரச்சனைகள் குறித்து சீன அதிகாரிகள் அரசாங்கத்தின் விசேட செயலணியை நேற்று சந்தித்தபோது தெரிவித்துள்ளனர்.

இந்தநிலையில் குறித்த பிரச்சனை ஜனாதிபதி செயலகத்துக்கு உத்தியோகபூர்வமாக முன்வைக்கப்படவுள்ளது.

இதேவேளை சீன நாட்டினர் புறக்கணிக்கப்படக்கூடாது என்று சுகாதார அமைச்சு அறிக்கை ஒன்றின்மூலம் இலங்கையின் பொதுமக்களை கேட்டுள்ளது.

இதற்கிடையில் முறைப்பாடுகள் தெரிவி;க்கப்பட்டால் இது தொடர்பில் பாதுகாப்பு அமைச்சுடன் கலந்துரையாடப்படும் என்று காவல்துறை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

Related posts