சீனர்களை கண்காணிக்க மென்பொருள் தயாரிப்பு- சுகாதார அமைச்சு.

கொரொனாரைவைரஸை தடுக்கும் வகையில் புதிய மென்பொருள் ஊடாக சீனா உட்பட்ட நாடுகளில்; இருந்து வருவோர் நெருங்கிய நிலையில் கண்காணிக்கப்படுவதாக சுகாதார அமைச்சு நாடாளுமன்றதுக்கு அறிவித்துள்ளது.

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க நாடர்ளுமன்றத்தின் சுகாதார உபகுழுவுக்கு இதனை அறிவித்துள்ளார்.

ஐசிடிஏயின் உதவியுடன் இலங்கையின் வைத்தியர்களால் இந்த மென்பொருள் இரண்டு நாட்களில் உருவாக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதன் மூலம் இலங்கைக்கு வரும் பயணிகள் கண்காணிக்கப்படவுள்ளனர்.

இதன்படி இலங்கைக்கு வரும் பயணிகள் கட்டுநாயக்கவில் மருத்துவ கண்காணிப்புக்கு உட்படுத்தப்பட்;டு பின்னர் அவர்கள் தொடர்பில் தொடர் கண்காணிப்புக்கள் மேற்கொள்ளப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

நோய் தொற்று ஏற்பட்டு இரண்டு வாரங்களிலேயே குணங்குறிகள் தென்படுவதால் இந்த தொடர் கண்காணிப்பு மேற்கொள்ளப்படவுள்ளதாக ஜாசிங்க தெரிவித்துள்ளார்.

இந்த ஏற்பாடுகள் யாழ்ப்பாணம் விமான நிலையம்¸ கொழும்பு மற்றும் காலி¸ திருகோணமலை துறைமுகங்களிலும் மேற்கொள்ளப்படவுள்ளன.

இந்தநிலையில் அனில் ஜாசிங்கவின் அறிக்கை நாடாளுமன்றில் அடுத்த வாரம் சமர்ப்பிக்கப்படும் என்று சுகாதார மனித நலன்புரி நாடாளுமன்ற கண்காணிப்புக்குழுவின் செயலாளர் மயில்வாகனம் திலகராஜ் தெரிவித்துள்ளாh

Related posts