கொழும்பில் பாடசாலைகளுக்கு விடுமுறை.

எதிர்வரும் பெப்ரவரி 3ஆம் திகதி கொழும்பில் உள்ள தனியார் மற்றும் சர்வதேச பாடசாலைகள் உட்பட பதினைந்து பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இலங்கையின் சுதந்திர தின கொண்டாட்டங்களுக்கான ஒத்திகை காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

அந்தவகையில், டி.எஸ்.சேனநாயக்க கல்லூரி, றோயல் கல்லூரி, தேர்ஸ்ரன் கல்லூரி, யசோதரா வித்தியாலயம், Musaeus கல்லூரி, சென்.பிரிட்ஜெற்ஸ் பாடசாலை, கொழும்பு மகளிர் கல்லூரி, கொழும்பு இன்ரர்நஷனல் பாடசாலை, Wycherley இன்ரர்நஷனல் பாடசாலை, மஹாநம கல்லூரி, சென்.மேரிஸ் கல்லூரி, சென்.மேரிஸ் ஆரம்ப பாடசாலை, மஹின்டு மகா வித்தியாலயம், அல்-ஹிதாயா மகா வித்தியாலயம் மற்றும் கொழும்பு அசோகா கல்லூரி ஆகியவற்றுக்கே விடுமுறை வழங்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, சுதந்திர தினக் கொண்டாட்டங்களுக்காக கொழும்பில் விசேட போக்குவரத்து நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts