கொரொனாவைரஸ் தொடர்பில் சர்வதேச எச்சரிக்கை பிரகடனம்.

கொரொனாவைரஸ் தொடர்பில் உலக சுகாதார மையம் சர்வதேச சுகாதார எச்சரிக்கையை பிரகடனப்படுத்தியுள்ளது.

இந்த பிரகடனம் நேற்று வெளியிடப்பட்டது.

சீனாவில் ஆரம்பித்த இந்த தொற்று சர்வதேச ரீதியாக பரவியுள்ள நிலையில் அதனை கட்டுப்படுத்துவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

இந்தநிலையில் இந்த தொற்று நாடுகளின் சுகாதார நடவடிக்கைகளில் பின்னடைவு இருக்கும் நிலையிலேயே பரவும் ஏதுக்களை கொண்டுள்ளது என்று உலக சுகாதார மையத்தின் தலைவர் டெட்ரோஸ் எடெனொம் ஜிபிரேயாசெஸ் தெரிவித்துள்ளார்.

இந்த தொற்று தொடர்பில் ஏற்கனவே உலக சுகாதார மையத்தின் அதிகாரிகள் சீனாவுக்கு சென்று நிலைமைகளை ஆராந்துள்ளனர்.

Related posts