எக்லெஸ் கேக் ரெசிப்பி

தேவை: தேங்காய்த் துருவல் – 1/3 கப், மைதா – ஒரு கப், சர்க்கரை – ஒரு கப், இனிப்பு சேர்க்காத கோகோ பவுடர் – 1/3 கப், பேக்கிங் பவுடர் – அரை டீஸ்பூன், உப்பு – அரை டீஸ்பூன், ஸ்ட்ராங் மசாலா டீ – அரை கப், எண்ணெய் – அரை கப், ­வெனிலா எசென்ஸ் – அரை டீஸ்பூன்.

எக்லெஸ் கேக் ரெசிப்பி

செய்முறை: அவனை 175 டிகிரி சென்டிகிரேடில் வைத்து பிரீஹீட் செய்து தயாராக வைத்துக்கொள்ளவும். 8 x 8 அங்குல பேக்கிங் பானில் (Pan) சமையல் எண்ணெயை லேசாகத் தடவி, அதன் மேல் 2 டீஸ்பூன் கோகோ பவுடர் தூவிவிடவும். மைதா மாவு, சர்க்கரை, கால் கப் கோகோ பவுடர், அரை டீஸ்பூன் பேக்கிங் பவுடர், உப்பு ஆகியவற்றை ஒன்றாகச் சேர்த்துக் கலந்துகொள்ளவும். தயாரித்து வைக்கப்பட்ட ஸ்ட்ராங்கான தேநீர், எண்ணெய், வெனிலா எசென்ஸ் உடன் மற்ற பொருள்களை ஒன்றாகச் சேர்த்து, ஈரப்பதம் வரும் வரை, கட்டியில்லாமல் நன்றாக மாவுப் பதத்துக்குக் கலந்துகொள்ளவும். கலவையைத் தேங்காய்த் துருவலில் சேர்க்கவும். வெண்ணெய் தடவிய பேக்கிங் பானில் கேக் கலவையைப் பரப்பவும். பிரீஹீட் செய்யப்பட்ட அவனில் இந்தக் கலவையை, குறைந்தபட்சம் 20 நிமிடங்களுக்கு வைக்கவும். பிறகு, வெளியே எடுத்து ஒரு மணி நேரம் குளிர அனுமதிக்கவும். பின்னர் சிறு சிறு துண்டுகளாக வெட்டவும். அற்புதமான சாக்லேட் மசாலா டீ பிரவுனீஸ் தயார்.

Related posts