80 மாணவர்களுக்கு வைரஸ் காய்ச்சலால் மூடப்பட்ட பாடசாலை

வைரஸ் காய்ச்சல் பரவியதன் காரணமாக குருணாகல் மாவட்டம் மஹோ, கிரிபாவ கல்வி வலயத்திற்குரிய யாய- 3 பெரக்கும்புர தேசிய பாடசாலை இன்று முதல் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

பாடசாலை அதிபர் உட்பட இந்த பாடசாலையில் பயிலும் 80 மாணவர்களுக்கு இந்த வைரஸ் காய்ச்சல் ஏற்பட்டுள்ளது.

பாடசாலை மீண்டும் திறக்கப்படும் தினம் அறிவிக்கப்படவில்லை. இந்த பாடசாலையில் 900 மாணவர்கள் கல்வி கற்று வருகின்றனர்.

Related posts