வுஹானில் உள்ள மாணவர்களை அழைத்து வர விரைந்து நடவடிக்கை- வெளியுறவு செயலர்

கொரொனாவைரஸினால் பாதிக்கப்பட்டுள்ள சீனாவின் வுஹான் நகரில் தங்கியுள்ள இலங்கை மாணவர்களை அங்கிருந்து அழைத்துவருவதற்கான கோரிக்கை தொடர்பில் சீன அரசாங்கம் விரைந்து நடவடிக்கை எடுப்பதாக வெளியுறவு செயலர் ரவிநாத ஆரியசிங்ஹ தெரிவித்துள்ளார்.

இதன் அடிப்படையில் மாணவர்களும் அவர்களின் குடும்ப உறுப்பினர்களும் விரைவில் அங்கிருந்து வெளியேற அனுமதிக்கப்படுவர் என்று ஆரியசிங்ஹ குறிப்பிட்டுள்ளார்

பீஜிங்கில் உள்ள இலங்கை தூதரகம்¸ ஹ_பாயில் உள்ள வெளியுறவு அலுவலத்துடன் தொடர்பு கொண்டு மாணவர்களின் நலன் குறித்து அறிந்துள்ளனர்.

அங்கு தங்கியுள்ள 33 மாணவர்களுக்கு உரிய உதவிகளை செய்து அவர்களின் பாதுகாப்புக்கும் அங்குள்ள அதிகாரிகள் உத்தரவாதம் வழங்கியுள்ளனர்.

இந்தநிலையில் அவர்கள் விரைவில் இலங்கைக்கு அனுப்பிவைக்கப்படவுள்ளதாக ஆரியசிங்ஹ குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை இவர்கள் நாடு திரும்பியவுடன் அவர்களை நேரடியாகவே தியத்தலாவ இராணுவ முகாமில் அமைக்கப்பட்டுள்ள 33 தனி அறைகளுக்கு அனுப்பி சிகிச்சையளிக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

இதற்கிடையில் வுஹானில் உள்ள தமது பிள்ளைகளை இலங்கைக்கு அழைத்து வர அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்று குற்றம் சுமத்தி இன்று கொழும்பில் உள்ள ஐக்கிய நாடுகள் அலுவலகத்துக்கு முன்னால் மாணவர்களின் பெற்றோர் ஆர்ப்பாட்டத்தை நடத்தினர்.

சீனாவில் மொத்தமாக 864 இலங்கையர்கள் தங்கியுள்ளனர்.

இவர்களில் இதுவரை 580பேர் நாடு திரும்பியுள்ளனர்.

Related posts