முகக்கவசங்களை அணியுமாறு அரசாங்கம் இன்னும் கட்டாயப்படுத்தவில்லை

கொரோனாவைரஸ் தொடர்பி;ல் முகக்கவசங்களை அணியுமாறு அரசாங்கம் இன்னும் கட்டாயப்படுத்தவில்லை என்று அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார்.

இந்த நோயின் தாக்கம் இன்னும் நாட்டில் தீவிரமாகவி;ல்லை.

எனவே பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை என்றும் அவர் செய்தியாளர்கள் மத்தியில் தெரிவித்துள்ளாh

சில வர்த்தகர்கள் நிலைமையை சாதகமாக பயன்படுத்திக்கொண்டு முகக்கவச விற்பனையை அதிகரிக்க முயற்சிகின்றனர்.

எனினும் பொதுமக்களை முகக்கவசம் பயன்படுத்துமாறு அரசாங்கம் இன்னும் கோரவில்லை என்று பந்துல குணவர்த்தன தெரிவித்தார்.

இலங்கையில் 10பேர் இந்த நோயினால் பாதிக்கப்பட்டதாக சந்தேகம் வெளியிடப்பட்டபோதும் ஒருவர் மாத்திரமே உறுதிப்படுத்தப்பட்டுள்ளார் என்றும் அமைச்சர் தெரிவித்தார்

Related posts