மஹிந்த தரப்பும் மைத்ரி தரப்பும் கட்சி யாப்பை ஏற்றுக்கொண்டன

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியும் “ஸ்ரீலங்கா நிதாஹஸ் பொதுஜன சந்தானய” ( ஸ்ரீலங்கா சுதந்திர பொதுஜன கூட்டணி) யாப்புக்கு ஒப்புதல் வழங்கியுள்ளன.

இதன்படி புதிய கூட்டணிக்கு கூட்டுத்தலைவர்கள் நியமிக்கப்படுவர்.

தவிசாளர்¸ பொதுச்செயலாளர் மற்றும் நிதிச்செயலாளர் ஆகிய பதவிகள் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கு வழங்கப்படவுள்ளன.

ஸ்ரீலங்கா சுதந்திர பொதுஜன கூட்டணிக்கான தேசிய அமைப்பாளர் பதவி ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சிக்கு வழங்கப்படவுள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பொதுச்செயலாளர் தயாசிறி ஜெயசேகர தெரிவித்துள்ளார்.

Related posts