பெண்ணை பாலியல் துன்புறுத்தல் செய்த காவல்துறையினருக்கு சிறை

கோட்டை ரயில்வே நிலையத்தில் வைத்து பெண் ஒருவரை பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கிய இரண்டு காவல்துறையினருக்கு தலா இரண்டு வருடசிறைத்தண்டனை அளிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் குறித்த பெண்ணுக்கு 200000 ரூபா நட்டஈடு வழங்கவேண்டும் என்றும்; நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த சிறைத்தண்டனை ஐந்து வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட வகையில் வழங்கப்பட்டுள்ளதுடன் அரச செலவாக 2500 ரூபாவை செலுத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

2011ஆம் ஆண்டு ஜூலை 9ஆம் திகதியன்று இவர்கள் குற்றம் புரிந்ததாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

சம்பவத்தின்போது இரண்டு காவல்துறையினரும் மதுபோதையில் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts