தென்னிலங்கையின் 192 கிலோகிராம் ஹெரோய்ன் கைப்பற்றப்பட்டுள்ளது

தென்னிலங்கையின் ஹொரனை பண்டாரகம பகுதியில்; சுமார் 192 கிலோகிராம் ஹெரோய்ன் கைப்பற்றப்பட்டுள்ளது.

இந்த சந்தைப்பெறுமதி இன்னும் அறிவிக்கப்படவில்லை.

இதன்போது 10 கைத்துப்பாக்கிகளும் 19 தோட்டாக்களும் கைப்பற்றப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் இரண்டு பெண்கள் உட்பட்ட மூவர் இந்த சோதனை நடவடிக்கையின்போது கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இது தொடர்பில் மேலதிக தகவல்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.

காவல்துறையினர் தொடர்;ந்தும் விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.

புதிய அரசாங்கம் ஆட்சிக்கு வந்தபின்னர் கைப்பற்றப்பட்ட அதிக தொகை ஹெரோய்ன் இது என கருதப்படுகிறது

Related posts