தடயவியல் அறிக்கைகளை மத்திய வங்கி சமர்ப்பித்தது.

இலங்கை மத்திய வங்கியின் முறி விற்பனை தொடர்பிலான தடயவியல் அறிக்கைகளை மத்திய வங்கி நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ளது.

மத்திய வங்கியினால் இது தொடர்பிலான ஐந்து அறிக்கைகள் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.

நாடாளுமன்ற செயலாளரின் எழுத்துமூல கோரிக்கையின்பேரிலேயே இந்த அறிக்கைகள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.

ஏற்கனவே இந்த அறிக்கைகள் உரிய சேர்க்கைகள் மற்றும் இணைப்புக்கள் இன்றி உள்ளதாக ஆளும் மற்றும் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் விமர்சனம் வெளியிட்டிருந்தனர்.

இதனையடுத்தே முழுமைப்படுத்தப்பட்ட அறிக்கைகள் மத்திய வங்கியினால் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.

இந்தநிலையில் இது தொடர்;பான நாடாளுமன்ற விவாதம் எதிர்வரும் பெப்ரவரி 18மற்றும 19ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளது.

Related posts