சட்டவிரோத ஆயுதக்களஞ்சியம்.

சட்டவிரோத ஆயுதக்களஞ்சியம் தொடர்பான எவென்காட் வழக்கில் இன்று சட்டமா அதிபர் திருத்தங்களுடன் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தார்.

நிரந்தர மூன்று நீதிபதிகளை கொண்ட ட்யல் அட்பார் அமர்வின் முன் இந்த குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

இந்த தகவலை சட்டமா அதிபரின் இணைப்பதிகாரி நிசாரா ஜெயரட்ன தெரிவித்துள்ளார்.

இந்தக்குற்றப்பத்திரிகையில் 882 குற்றங்கள் சுமத்தப்பட்டுள்ளன.

இந்தநிலையில் வழக்கு விசாரணைக்கான திகதி பெப்ரவரி 10 என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையின் கடற்பரப்பில் செயற்பட்டு வந்த இந்த ஆயுதக்களஞ்சியத்தினால் அரசாங்கத்துக்கு பல பில்லியன் டொலர்கள் நட்டம் ஏற்பட்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

.

Related posts