கோரொனாவைரஸ் காரணமாக ஹொங்கொங் இலங்கை தூதரக அலுவலம் மூடப்பட்டுள்ளது.

கோரொனாவைரஸ் தொற்று அச்சம் காரணமாக ஹொங்கொங்கில் உள்ள இலங்கை தூதரக அலுவலம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

இந்த அலுவலகம் எதிர்வரும் திங்கட்கிழமை வரை மூடப்பட்டிருக்கும் என்று தூதரகம் அறிவித்துள்ளது.

அரசாங்க பணியாளர்கள் மற்றும் வர்த்தக பணியாளர்கள் அனைவரும் வீடுகளுக்கு செல்லுமாறு ஹொங்கொங் அரசாங்கம் அறிவித்தல் விடுத்தமையை அடுத்தே இந்த தூதரகம் மூடப்பட்டது.

இதேவேளை பெப்ரவரி 4ஆம் திகதி தூதரகத்தில் இடம்பெறவிருந்த இலங்கையின் சுதந்திரதின நிகழ்வுகள் ரத்துச்செய்யப்பட்டுள்ளன.

Related posts