கொரோனஸ்வைரஸ் பரவல் தொடர்பில் பிரதமர் மஹிந்த ராஜபக்சவும் ரணில் விக்கிரமசிங்கவும் கலந்துரையாடியுள்ளனர்.

இதன்போது தொற்றை கட்டுப்படுத்த அரசாங்கம் எடுக்கும் முனைப்புக்களுக்கு தமது கட்சி ஆதரவை வழங்கும் என்று ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

இந்தநிலையில் கொரொனாவைரஸ் விடயத்தில் அரசாங்கத்துடன் இணைந்து செயற்படுமாறு தாம் ஐக்கிய தேசியக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரும் வைத்திய கலாநிதியுமான காவிந்த ஜெயவர்த்தனவுக்கு ஆலோசனை வழங்கியுள்ளதாக ரணில் தெரிவித்துள்ளார்.

இதேவேளை பாதுகாப்பு முகக்கவசத்தை இந்நதியாவில் பெற்றுக்கொள்வதற்கும் இது தொடர்பில் இந்திய உயர்ஸ்தானிகரக அதிகாரிகளுடன் கலந்துரையாடியுள்ளதாகவும் ரணில் விக்கிரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.

இந்தநிலையில் இந்தியாவில் உள்ள பல நிறுவனங்களுடன் பேசி முகக்கவசங்களை பெற்றுக்கொடுக்க காவிந்த ஜெயவர்த்தன ஏற்கனவே நடவடிக்கை எடு;த்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Related posts