கொனோராவைரஸ் காரணமாக சீனாவில் இறந்தோரின் எண்ணிக்கை 170ஆக உயர்ந்துள்ளது

தொற்றினால் பாதிக்கப்பட்ட ஹியுபெய் மாகாணத்தில் புதிதாக 38பேர் இறந்தநிலையிலேயே 170 என்ற எண்ணிக்கை அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.

இந்தநிலையில் புதிதாக 1700 பேருக்கு நோய் தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

கடந்த டிசம்பரில் ஹியுபெய் மாகாணத்தில் பரவிய இந்த தொற்று தற்போது உலகளாவிய hPதியில் பரவியுள்ளது.

இந்தநிலையில் இலங்கை இந்தியா உட்பட்ட நாடுகள் தமது பிரஜைகளை அங்கிருந்து வெளியேற்றும் நடவடிக்கைகளை எடுத்துள்ளன.

21ஆயிரம் இந்திய மாணவர்கள் சீனாவில் மருத்துவத்துறையில் கல்வி பயில்கின்றனர்.

இந்தநிலையில் சீன ஜனாதிபதி ஸி ஜிங்பிங் கொரோனாவைரஸ் உடனடியாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்படவேண்டும் என்று கோரியுள்ளார்

சீன சுகாதார அமைச்சின் தகவல்படி இதுவரை 7711 பேர் இந்த தொற்றின் காரணமாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதில் 131 பேரின் நிலை கவலைகிடமாக உள்ளது.

சீனாவின் 31 இடங்களில் இந்த நோய் தொற்று பரவியுள்ளது.

124பேர் நோயினால் பாதிக்கப்பட்டு சிகிச்சையின் பின்னர் வீடுகளுக்கு திரும்பியுள்ளனர்.

81947பேர் மருத்துவ கண்காணிப்பின் கீழ் உள்ளதாக சிங்வா செய்தி சேவை தெரிவித்துள்ளது.

Related posts