கப்ரால் பதவி விலகவேண்டும் அல்லது விலக்கப்படவேண்டும்- ஐக்கிய தேசியக்கட்சி…

மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநரும் பிரதமர் மஹிந்த ராஜபக்சவின் சிரேஸ்ட ஆலோசகருமான அஜித் நிவாட் கப்ரால் தமது பதவியை விட்டு விலகவேண்டும். அல்லது அவர் பதவிநீக்கப்படவேண்டும் என்று ஐக்கிய தேசியக்கட்சி கோரியுள்ளது.

மத்திய வங்கியின் தடயவியல் அறிக்கை வெளியாகியுள்ள நிலையில் இந்தக்கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

குறி;த்த தடயவியல் அறிக்கையை சவாலுக்கு உட்படுத்தி அண்மையில் கப்ரால் கருத்து ஒன்றை பதிவுசெய்திருந்தார்.

அவர் தகுதிவாய்ந்த கணக்காளர் என்ற வகையில் அவரின் சவால் ஏற்றுக்கொள்ளக்கூடியது.

எனினும் அவர் அரசாங்கத்தின் முக்கிய பதவியில் இருந்துக்கொண்டு இந்தக் கருத்தை வெளியிட்டிருக்கக்கூடாது என்று நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் பி பெரேரா தெரிவித்துள்ளார்.

இதேவேளை குறித்த தடயவியல் அறிக்கை வெளியாகும் முன்னரே கப்ரால் அது தொடர்பில் செய்தி;த்தாள் ஒன்றுக்கு கருத்துக்களை பதிவுசெய்திருந்தார்.

இதன்மூலம் குறித்த தடயவியல் அறிக்கை நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு கிடைக்கும் முன்னரே அவருக்கு கிடைத்தமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்றும் அஜித் பி பெரேரா தெரிவித்துள்ளார்.

Related posts