ஐக்கிய தேசிய கட்சியின் முக்கிய உறுப்பினர்கள் நீக்கப்பட்டுள்ளனர்.

ஐக்கிய தேசியக்கட்சியின் செயற்குழுவில் இருந்து கொழும்பு மாநகர முதல்வர் ரோசி சேனாநாயக்க மற்றும் முன்னாள் அமைச்சர்; இம்தியாஸ் பாக்கீமார்க்கார் ஆகியோர் உறுப்புமைகளும் நீக்கப்பட்டுள்ளன.

இந்த தகவலை கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ச டி சில்வா தெரிவித்துள்ளார்.

இன்று கட்சியின் புதிய செயற்குழுவை தீர்மானிக்கும் கூட்டம் ஸ்ரீகோத்தா தலைமையகத்தில் இன்று மாலை இடம்பெறவுள்ளது.

ஏற்கனவே செயற்குழுவில் இருந்து பீல்ட் மாசல் சரத் பொன்சேகா மற்றும் அஜித் பி பெரேரா ஆகியோரின் உறுப்புரிமைகளே நீக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியிருந்தன.

இந்தநிலையில் இருவரை தவிர ஏனைய பழைய உறுப்பினகள் புதிய செயற்குழுவூக்கு நியமிக்கப்படுவர் என்று ஐக்கிய தேசியக்கட்சியின் பொதுச்செயலாளர் அகில விராஜ் காரியவசம் தொரிவித்திருந்தமையூம் இங்கு குறிப்பிடத்தக்கது.

இதேவேளை இன்று மாலை இடம்பெறும் ஐக்கியதேசியகட்சியின் செயற்குழு கூட்டத்தில் பங்கேற்பதில்லை என்று எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ உட்பட்ட பல நாடாளுமன்ற உறுப்பினார்கள் தீர்மானித்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்ணான்டோ அறிவித்துள்ளார்;

Related posts