எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ உட்பட்ட பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் செயற்குழு கூட்டத்தில் இருந்து வெளியேற்றம்:

ஐக்கிய தேசியக்கட்சியின் செயற்குழுவில் இருந்து கொழும்பு மாநகர முதல்வர் ரோசி சேனாநாயக்க மற்றும் முன்னாள் அமைச்சர் இம்தியாஸ் பாக்கீர் மார்க்கார் ஆகியோரின் உறுப்புரிமைகள் நீக்கப்பட்டுள்ளன.

இந்த தகவலை கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ச டி சில்வா தெரிவித்துள்ளார்

இன்று கட்சியின் புதிய செயற்குழுவை தீர்மானிக்கும் கூட்டம் ஸ்ரீகோத்தா தலைமையகத்தில் இடம்பெற்றபோதே இந்த இருவரும் நீக்கப்பட்டதாக சில்வா குறிப்பிட்டுள்ளார்.

இதனையடுத்து எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ உட்பட்ட பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் செயற்குழு கூட்டத்தில் இருந்து வெளியேறியதாக தகவல்கள் வெளியாகிவுள்ளன.

ஏற்கனவே பீல்ட் மார்சல் சரத் பொன்சேகா மற்றும் அஜித் பி பெரேரா ஆகியோரின் உறுப்புரிமைகளே நீக்கப்படும் என்று தகவல்கள் வெளியாகியிருந்தன.

இந்தநிலையில் இருவரை தவிர ஏனைய பழைய உறுப்பினர்கள் புதிய செயற்குழுவூக்கு நியமிக்கப்படுவர் என்று ஐக்கிய தேசியக்கட்சியின் பொதுச்செயலாளர்; அகில விராஜ் காரியவசம் தெரிவித்திருந்தமையூம் இங்கு குறிப்பிடத்தக்கது.

Related posts