இலங்கைக்கு வரும் சீன மக்களை கண்டு பயங்கொள்ளவேண்டாம் – தூதரகம்.

இலங்கைக்கு வரும் சீன பொதுமக்கள் தொடர்பில் பயங்கொள்ளவேண்டாம் என்று இலங்கையில் உள்ள சீன தூதரகம் தெரிவித்துள்ளது.

கொரோனாவைரஸை கட்டுப்படுத்தும் அனைத்து நடவடிக்கைகளையும் சீன அரசாங்கம் எடுத்துள்ளது.

வுஹான் மற்றும் கொரொனாரைவஸ் பாதிக்கப்பட்ட இடங்களில் அந்த நோயை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் வெற்றிக்கரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சீன அரசாங்கம் குறிப்பிட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட வுஹான் மாகாணம் ஏனைய பிரதேசங்களில் இருந்து தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.

ஹ_பாயில் உள்ள சீனர்கள் இலங்கைக்கு வருவதை குறைந்தது 14 நாட்களுக்கு காலந்தாழ்த்துமாறு அந்த நாட்டின் அரசாங்கம் கோரியுள்ளது

Related posts