இலங்கைக்கு அழைத்துவரப்பட்ட மாணவர்களின் கண்காணிப்புக்காக 33 தனிமைப்படுத்தப்பட்ட அறைகள்

சீனாவில் இருந்து கொரொனவைரஸ் காரணமாக இலங்கைக்கு அழைத்துவரப்பட்ட மாணவர்களின் மருத்துவக்கண்காணிப்புக்காக 33 தனிமைப்படுத்தப்பட்ட அறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

விமான நிலையத்தில் கையேற்கப்படும் மாணவர்கள்; விசேட பாதுகாப்பின் கீழ் தியத்;தலாவ இராணுவ முகாமுக்கு அழைத்துச்செல்லப்படவுள்ளனர்.

இந்தநிலையில் 24 மணித்தியாலங்களும் கண்காணிப்பில் வைக்கப்படும் அவர்களில் எவருக்காவது கொரொனாவைரஸ் தொற்று காணப்படுமானால் அவர்கள் உடனடியாக தொற்று நோய் சிகிச்சை வைத்தியசாலைக்கு மாற்றப்படவுள்ளனர்.

Related posts