இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்கம்!

சீனாவில் இருந்து கேரளா வந்த மாணவருக்கு கொரோனா வைரஸ் இருப்பது இனங்காணப்பட்டுள்ளது.

இந்தியாவில் – கொரோனா வைரஸ் இருப்பது இதுவே முதல் தடவையாக கண்டறியப்பட்டுள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. சீனாவில் இந்த வைரஸால் 170 பேர் பலியாகி உள்ளனர்.

சீனாவின் வுஹான் பல்கலைகழகத்தில் இருந்து கேரளாவிற்கு வந்த மாணவருக்கே இவ்வாறு கொரோனா வைரஸ் தாக்கம் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.

தற்போது அவர் தனி கண்காணிப்பு பிரிவில் வைத்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.

Related posts