கொழும்பில் 2008 ஆம் ஆண்டு 11 இளைஞர்கள் கடத்தி காணாமல் போகச்செய்யப்பட்டமை தொடர்பிலான வழக்கில் சாட்சிகளை பயமுறுத்தியதாக குற்றம் சுமத்தப்பட்ட இரண்டு கடற்படை அதிகாரிகள் விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.
இவர்கள் இருவரையும் ஜனவரி 31வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு மேலதிக நீதிவான்இன்று உத்தரவிட்டார்.
கடத்தப்பட்ட இந்த 11பேரும் பின்னர் 2008, 2009ஆம் காலப்பகுதிகளில் கொல்லப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த கடத்தல் சம்பவத்துடன் தொடர்பு என்றுக் கூறி கடற்படையின் முன்னாள் தளபதி வசந்த கரணாகொட மற்றும் கடற்படையின் முன்னாள் பேச்சாளர் டிகேபி தசநாயக்க ஆகியோரும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளனர்.
எனினும் அவர்களை நீதிமன்றம் பிணையில் செல்ல அனுமதி வழங்கியுள்ளது.