விடுதலைப்புலிகளுக்கு ஆதரவளித் சாமிநாதனுக்கு பிணை வழங்க மேல்நீதிமன்றம் ஒன்று மறுத்துள்ளது.

தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு ஆதரவளித்தார் என்ற குற்றச்சாட்டின்பேரில் மலேசியாவில்; கைதுசெய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல்வாதியான சாமிநாதனுக்கு பிணை வழங்க அந்த நாட்டு மேல்நீதிமன்றம் ஒன்று மறுத்துள்ளது.

நீதிமன்றத்தில் வைத்து நீதிசேவை ஆணையாளர் டட்;டுக் அஹமட் சாஹிர் இந்த தீர்மானத்தை அறிவித்தார்.

நாட்டின் பாதுகாப்பு குற்றங்களின் 2012 சட்டத்தின் கீழ் இந்த தீhமானம் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

சாமிநாதன் உட்பட்ட ஐந்துபேர் கடந்த ஒக்டோபரில் விடுதலைப்புலிகளுக்கு மலேசியாவில் ஆதரவளித்தமை தொடர்பில் கைதுசெய்யப்பட்டனர்.

இதன்பின்னர் அவர்கள் சார்பில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்யப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

இந்தநிலையிலேயே மெலாகா மாகாணத்தின் அரசியல்வாதியான சாமிநாதனுக்கு இன்று பிணை மறுக்கப்பட்டுள்ளது.

Related posts