பிரெக்சிட்டால் ஒரு ஜேர்மன் கிராமத்தில் ஏற்பட்டுள்ள குழப்பமான உணர்வுகள்!

பிரெக்சிட் பவேரியாவிலுள்ள ஒரு கிராம மக்களுக்கு குழப்பமான உணர்வுகளை ஏற்படுத்தியுள்ளது.

அதாவது, பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறுவதையடுத்து, புவியியல் ரீதியில் ஐரோப்பிய ஒன்றியத்தின் மையப்பகுதி இடம் மாறுகிறது.

தற்போது பவேரியாவிலுள்ள Westerngrund என்ற இடம் ஐரோப்பிய ஒன்றியத்தின் மையப்பகுதியாக உள்ளது.

பிரித்தானியா வெளியேறுவதால், அது சற்று நகர்ந்து Gadheim என்ற கிராமத்திற்கு வருகிறது.

அதாவது, பிப்ரவரி 1ஆம் திகதியிலிருந்து Gadheimதான் ஐரோப்பிய ஒன்றிய நிலப்பரப்பின் மையமாக கருதப்படும். Gadheim கிராமத்தில் வெறும் 80 பேர்தான் வாழ்கிறார்கள்.

தற்போது அந்த இடத்தில், ஒரு தோட்டம் அமைக்கப்பட்டு, அங்கு ஜேர்மானிய மற்றும் ஐரோப்பிய ஒன்றிய கொடிகளுடன் உள்ளூர் கொடிகளும் நடப்பட்டுள்ளன.

அந்த கிராமத்தில் வாழும் Karin Kessler என்னும் பெண்மணி, இந்த புதிய மாற்றம் தன் கிராம மக்களுக்கு குழப்பமான உணர்வுகளை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கிறார்.

2017ஆம் ஆண்டு மார்ச் மாதம், ஐரோப்பிய ஒன்றியத்தின் மையப்பகுதி Gadheimக்கு மாறும் என்று கூறப்பட்டபோது அது வேடிக்கைக்காக கூறப்பட்டது என்று தான் எண்ணியதாக குறிப்பிடுகிறார் அவர்.

அதே நேரத்தில், பிரித்தானியா வெளியேறுவது ஐரோப்பிய ஒன்றியத்தின் எதிர்காலத்தைக் குறித்த அச்சத்தை உள்ளூர் மக்களிடையே ஏற்படுத்தியுள்ளதாகவும் அவர் தெரிவிக்கிறார்.

Related posts