நோய் தொற்றுக்களை தடுப்பதற்காக அணியப்படும் முகக்கவசங்களுக்கான விலைகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன

நோய் தொற்றுக்களை தடுப்பதற்காக அணியப்படும் முகக்கவசங்களுக்கான விலைகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன.

இதன்படி அழித்துவிடக்கூடிய முகக்கவசங்கள் 15ரூபாவுக்கு விற்பனை செய்யப்படவேண்டும்.

அதேநேரம் என்95 முகக்கவசம் 150 ரூபாவுக்கே விற்பனை செய்யப்படவேண்டும் என்று சுகாதார அமைச்சு அறிவுறுத்தியுள்ளது.

இதனை மீறுவோர் சட்டத்தின்கீழ் தண்டிக்கப்படுவர் என்று சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

கொரோனாவைரஸ் தொற்று பரவுவதை தடுக்கும் முகமாக முகக்கவசங்களை அணியவேண்டும் என்று சுகாதார அமைச்சு ஏற்கனவே பொதுமக்களிடம் அறிவுறுத்தியிருந்தது.

இதனை பயன்படுத்தி வியாபாரிகள் முகக்கவசங்களை அதிக விலைக்கு விற்பனை செய்வதாக குற்றம் சுமத்தப்பட்டமையை அடுத்தே அதற்கான நிர்ணய விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Related posts