செல்பி எடுக்க முயன்ற ரசிகரின் செல்போனை பறித்த சல்மான் கான்

பாலிவுட்டில் முன்னணி நடிகராக இருக்கும் சல்மான் கான், தன்னுடன் செல்பி எடுக்க முயன்ற ரசிகரின் செல்போனை பறித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

செல்பி எடுக்க முயன்ற ரசிகரின் செல்போனை பறித்த சல்மான் கான்

சல்மான் கான்பிரபல இந்தி நடிகர் சல்மான் கான், நேற்று கோவாவுக்கு விமானத்தில் சென்றார். விமான நிலையத்தில் இருந்து அவர் வெளியே வந்து கொண்டிருந்தபோது, ஒரு ரசிகர் நெருங்கி வந்து அவருடன் ‘செல்பி‘ எடுக்க முயன்றார். அதனால் கோபமடைந்த சல்மான் கான், அந்த ரசிகரின் செல்போனை பறித்தார். 

சல்மான் கான்

இந்த வீடியோ காட்சி, சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவியது. அந்த நபர், ஒரு விமான நிறுவனத்தின் கடைநிலை ஊழியர் என்று தெரிய வந்தது. ஆனால், சம்பவம் குறித்து புகார் தரப்படவில்லை என்று விமான நிலைய போலீஸ் இன்ஸ்பெக்டர் சாகர் எகோஸ்கர் தெரிவித்தார். 

Related posts