சுவையான தக்காளி குழம்பு செய்யும் முறை

குழம்பு செய்ய அதிக நேரம் பிடிக்கும் என்பதால் சீக்கிரமாக மற்றும் எளிதாக வைக்கப்படும் தக்காளி குழம்பு வைப்பதை விரும்புகின்றனர். எந்த காய்கறிகளும் உங்கள் வீட்டில் இல்லாத சமயத்தில் தக்காளி மட்டும் இருந்தால் இந்த தக்காளி குழம்பினை எளிமையாக செய்து விடலாம். அதுகுறித்து இந்த பதிவில் காண்போம் வாருங்கள்.

தக்காளி குழம்பு செய்ய தேவையான பொருட்கள்: – எண்ணெய் – 4 ஸ்பூன் பட்டை – 1 துண்டு கடுகு – 1/2 ஸ்பூன் உளுந்தம்பருப்பு – 1/4 ஸ்பூன் வெங்காயம் – 2 தக்காளி – 4 பூண்டு – 5 பல் மிளகாய்த்தூள் – தேவையான அளவு உப்பு – தேவையான அளவு சீரகத்தூள் – 1 ஸ்பூன் மல்லித்தூள் – 1/2 ஸ்பூன் மஞ்சள் தூள் – 1/4 ஸ்பூன் கொத்தமல்லி – சிறிதளவு

தக்காளி குழம்பு செய்முறை:

ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி அது சூடானதும் பட்டை சேர்த்து அதனுடன் கடுகு, உளுந்தம்பருப்பு மற்றும் வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்கி கொள்ளவும்.பிறகு நன்றாக வதங்கியதும் அதனுடன் பச்சைமிளகாய் சேர்த்து மீண்டும் வதக்கவும். பிறகு, நறுக்கிய தக்காளி மற்றும் இடித்த பூண்டு சேர்த்து அதனுடன் மிளகாய்த்தூள் சேர்த்து மீண்டும் நன்றாக வதக்கவும். பிறகு உப்பு, சீரகத்தூள், மல்லித்தூள் மற்றும் மஞ்சள்தூள் சேர்த்து தண்ணீர் ஊற்றி நன்றாக கொதிக்க விடவும்.

Related posts