சிறைக்கைதிகளுக்கும் வாக்களிக்கும் உரிமை

அடுத்து வரும் நாடாளுமன்ற தேர்தலில் சிறைக்கைதிகளுக்கும் வாக்களிக்கும் உரிமை வழங்கப்படவேண்டும் என்று தேர்தல்கள் கண்காணிப்பாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கபே என்ற சுதந்திரமான தேர்தல்களுக்கான அமைப்பு மற்றும் மனித உரிமைகள் இல்லம் ஆகியன் இது தொடர்பில் மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கும் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கும் கடிதங்களை எழுதியுள்ளன.

ஒருவர் சிறையில் இருக்கிறார் என்ற காரணத்தை காட்டி அவரின் வாக்குரிமையை மறுக்கமுடியாது என்று அந்த அமைப்புக்கள் தமது கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளன.

உலக நாடுகள் பலவற்றிலும் இந்த முறை கடைபிடிக்கப்படுகிறது. எனவே இலங்கையிலும் சிறைக்கைதிகள் வாக்களிக்க அனுமதிக்கப்படவேண்டும் என்று அந்த அமைப்புக்கள் கேட்டுள்ளன.

இலங்கையில் சுமார் 25ஆயிரம் சிறைக்கைதிகள் உள்ளனர்.

இவர்களில் பெரும்பாலானோர் வாக்காளர்களாக பதிவுசெய்யப்பட்டவர்கள் என்றும் தேர்தல்கள் கண்காணிப்பு அமைப்புக்கள் சுட்டிக்காட்டியுள்ளன.

Related posts