சட்டமா அதிபருக்கும் சபாநாயகருக்கும் இடையில் சந்திப்பு

சட்டமா அதிபர் தம்புல டி லிவேராவுக்கும் சபாநாயகர் கரு ஜயசூரியவுக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நீதிபதி கிஹான் பிலபிடியவை கைது செய்யும் உத்தரவு தொடர்பாக அரசியலமைப்பு சபைக்கு அழைப்பு விடுத்ததை தொடர்ந்தே குறித்த சந்திப்பு இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகின்றது.

இதேவேளை தமக்கு உரித்தளிக்கப்பட்ட செயற்பாடுகளை ஆற்றுவதிலிருந்து விலகியிருக்குமாறு உத்தரவிடுவதற்கு, ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு சட்டபூர்வ அதிகாரமில்லையென நேற்று   சட்டமா அதிபர் தெரிவித்திருந்தார்.

இந்நிலையிலேயே குறித்த சந்திப்பு தற்போது இடம்பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

11 இளைஞர்களைக் கடத்தியதாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டு தொடர்பான வழக்கிலிருந்து சட்டமா அதிபரை விலகியிருக்குமாறு, அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பான குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஜனாதிபதி ஆணைக்குழு அண்மையில் பணித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts