கொரோனாவைரஸை கட்டுப்படுத்த அனைத்து சர்வதேச விமான நிலையங்களும் தயார்படுத்தப்பட்டுள்ளன

கொரோனாவைரஸை கட்டுப்படுத்தும் வகையில் நாட்டின் அனைத்து சர்வதேச விமான நிலையங்களும் தயார்படுத்தப்பட்டுள்ளன.

கட்டுநாயக்க விமானநிலையம், மத்தளை விமானநிலையம் யாழ்ப்பாணம் விமான நிலையம் மற்றும் ரத்மலானை விமானநிலையம் ஆகியவற்றிலேயே இந்த தயார்நிலை ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இந்த விமானநிலையங்களி;ன் அதிகாரிகள் கொரொனாவைரஸ் பரவுகையை கட்டுப்படுத்தும் வகையில் ஆயத்தநிலையில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை உள்ளூர் விமானநிலையங்களிலும் நோய்தடுப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

யாழ்ப்பாணத்துக்கான உள்ளூர் சேவைகள் ஆரம்பிக்கப்படவுள்ளமையால் இந்த ஏற்பாடுகள் உள்ளூர் விமானநிலையங்களிலும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சிவில் விமான போக்குவரத்து அதிகாரசபை அறிவித்துள்ளது.

Related posts