கொரொனாவைரஸினால் பாதிக்கப்பட்டவர்களை தியத்தலாவ இராணுவ முகாமுக்கு அனுப்பும் நடவடிக்கை

சீனாவில் கொரொனாவைரஸ் தொற்று ஏற்பட்டமையை அடுத்து அங்கிருந்து அழைத்துவரப்பட்ட இலங்கை மாணவர்களையும் கொரொனாவைரஸினால் பாதிக்கப்பட்டவர்களையும் தியத்தலாவை இராணுவ முகாமுக்கு அனுப்புவதற்கு எடுக்கப்பட்ட தீர்மானத்தை பதுளை மாவட்ட சுகாதார அதிகாரிகள் ஆட்சேபித்துள்ளனர்.

அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் பதுளை மாவட்ட தலைவர் பாலித்த ராஜபக்ச இது தொடர்பில் கருத்துரைக்கும்போது கொரொனாவைரஸினால் பாதிக்கப்பட்டவர்களை தியத்தலாவ இராணுவ முகாமுக்கு அனுப்பும் நடவடிக்கை தமக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.

பாதிக்கப்பட்டவர்கள் தியத்தலாவைக்கு அனுப்பப்பபட்டு அவர்கள் நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் என்று கண்டறியப்பட்டால் அவர்களுக்கு சிகிச்சையளிக்க பதுளை வைத்தியசாலையின் உரிய வசதிகள் இல்லை என்று அவர் குறிப்பிட்டார்.

எனவே அவர்களை மீண்டும் கொழும்புக்கு அழைத்துச்சென்றே சிகிச்சையளிக்கப்படவேண்டும்.

அதேநேரம் தியத்தலாவை முகாமில் இந்த நோய்க்கான சிகிச்சையை வழங்கும் வகையில் விசேட வைத்தியர்கள் இல்லை.

இந்தநிலையில் நாட்டின் ஒரு இடத்தில் இருந்து நோயாளிகளை இன்னுமொரு இடத்துக்கு அனுப்பும்போது சுகாதார பிரச்சனைகளை கருத்திற்கொள்ளாமை கவலையளிக்கிறது என்றும் ராஜபக்ச குறிப்பிட்டார்

Related posts