கள்ளக்காதல் ஜோடியின் மூக்கை அறுத்த கிராம மக்கள்

கள்ளக்காதல் ஜோடியை கிராம மக்கள் பிடித்து கம்பத்தில் கட்டி மூக்கை அறுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியா மாவட்டம் கந்த் பிப்ரா கிராமத்தில் 23 வயது இளைஞர் ஒருவர் திருமணமான 30 வயதுடைய பெண் ஒருவருடன் முறையற்ற உறவில் இருந்துள்ளார். அந்த பெண்ணின் கணவர் வெளிநாட்டில் வேலை பார்த்துவருவதாக தெரிகிறது

இந்நிலையில், நேற்று வழக்கம் போல் இளைஞர் அந்த பெண் வீட்டுக்கு வந்துள்ளார். இதனை அந்த பெண்ணின் மாமனார் பார்த்துவிட்டார்.

உடனே, உறவினர்கள் ஒன்று கூடி, கள்ளக்காதல் ஜோடியை கையும் களமாக பிடித்து கம்பத்தில் கட்டி வைத்துள்ளனர்.
ஒருக்கட்டத்தில் ஆத்திரமடைந்த உறவினர்கள் இருவரின் மூக்கையும் அறுத்துள்ளனர்.

பின்னர், இருவரையும் போலீசில் ஒப்படைத்துள்ளனர்.உடனே அவர்களை மீட்ட போலீசார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.

மேலும், அந்த பெண்ணின் மாமனார் உட்பட 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

மூக்கு அறுபட்ட இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால், அசம்பாவிதம் நடக்காமல் இருக்க அந்த கிராமத்தில் போலீஸ் குவிக்கப்பட்டுள்ளது.

Related posts