உலக நாடுகள் எதிர்ப்பை மீறி தலையில் மண்ணை போட்டுக்கொண்ட சீனா

சீனாவில் உள்ள வுஹானில், பயோ-வெப்பன் (உயிரி ஆயுதங்கள்) தயாரிக்க உயிர்க்கொல்லி வைரஸ்களை கண்டறியும் ஆய்வுக் கூடத்தை சீனா அரசு நிறுவியது. உலக நாடுகளின் எதிர்ப்புகளை மீறி சீனா அமைத்த இந்த ஆய்வுக்கூடத்தில் இருந்து ஆபத்தான வைரஸ்கள் பரவலாம் என அமெரிக்கா உள்பட உலக ஏற்கனவே எச்சரித்த தகவல் தெரிய வந்துள்ளது.

அமெரிக்க மேரிலாந்து உயிரி பாதுகாப்பு ஆலோசகர் டிம் ட்ரெவன், ‘சீனாவின் கலாச்சாரம், இந்த ஆய்வைப் பாதுகாப்பற்றதாக மாற்றக் கூடும். இங்கிருந்து கிருமிகள் வெளியேறி கடும் உயிர்ச் சேதங்களை ஏற்படுத்தும்’ என, 2017ம் ஆண்டே எச்சரித்திருந்தார்.இதை மெய்ப்பிக்கும் வகையில், ‘சார்ஸ்’ மற்றும் ‘எபோலோ’ என்ற வைரஸ்கள் இந்த ஆய்வகத்தில் இருந்து பல முறை வெளியேறி, பாதிப்பை ஏற்படுத்தியதை ஆய்வாளர்கள் நிரூபித்துள்ளனர்.

இருந்த போதும், சீன அரசு, இந்த ஆய்வகத்தை மூடவோ, உயிரி ஆயுதங்களை கண்டுபிடிக்கும் முயற்சியைக் கைவிடவோ இல்லை.இந்நிலையில், சீனாவின் வுஹான் நகரை, ‘கரோனா வைரஸ்’ தாக்கியது. அங்கிருந்து சீனாவின் பிற நகரங்களுக்கும், பிற நாடுகளுக்கும் வேகமாகப் பரவி வருகிறது.

இந்நிலையில், இஸ்ரேல் ராணுவ புலனாய்வு பிரிவு முன்னாள் அதிகாரியான டேனி ஷோஹம், ‘சீனாவின் பயோ–வெப்பன் தயாரிக்கும் ஆய்வுக்கூடத்தில் இருந்து தான் கரோனா வைரஸ் பரவியிருக்க வேண்டும் என சந்தேகிக்கிறேன்’ எனக் கூறியிருந்தார்.டேனி ஷோஹமின் கருத்து வெளியான சமயத்தில், வுஹான் நகரில் உள்ள வனவிலங்கு விற்பனைச் சந்தையில் இருந்து தான், கொரோனா வைரஸ் பரவியதாகக் சீன அரசு கூறியது. இதையடுத்து அந்த சந்தை மூடப்பட்டது.தற்போது கரோனா வைரஸ் தாக்கத்தால், 132 பேர் இறந்துள்ளனர்; 4,500க்கும் மேற்பட்டோர் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். அனைத்து நாடுகளும் இந்த வைரஸ் தாக்கத்திலிருந்து தற்காத்துக்கொள்ளும் நடவடிக்கைகளில் தீவிரம் காட்டி வருகின்றன.

Related posts