இலங்கையில் கொல்லப்பட்டும் காணாமல் போயும் உள்ள செய்தியாளர்கள் தொடர்பில் நடவடிக்கை எடுக்கவேண்டும்

இலங்கையில் கொல்லப்பட்டும் காணாமல் போயும் உள்ள செய்தியாளர்கள் தொடர்பில் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கோரி ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டுள்ளது.

இதனை வலியுறுத்தி தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் உட்பட்ட 6 ஊடக அமைப்புக்கள் கொழும்பில் நேற்று நிகழ்வு ஒன்றை ஏற்பாடு செய்திருந்தன

கடந்த 10 ஆண்டுகளில்; செய்தியாளர்கள் காணாமல் போன மற்றும் கொல்லப்பட்ட சம்பவங்கள் 138 பதிவாகியுள்ளன.

2005ஆம் ஆண்டு வரை 16 செய்தியாளர்களும் செய்தி நிறுவனங்களின் பணியாளர்களும் கொல்லப்பட்டனர்.

எனினும் இந்த சம்பவங்கள் தொடர்பில் உண்மை குற்றவாளிகள் கண்டு;பிடிக்கப்படவில்லை.

ஊடக பணியாளர் தொழிற்சங்கத்தின் செயலாளர் தர்மசிறி லங்காபெலி இதன்போது உரையாற்றுகையில் ஊடகத்துறையினரை பாதுகாப்பதன் மூலமே நாட்டை முன்னோக்கி கொண்டு செல்லமுடியும் என்று குறிப்பிட்டார்

இன்னும் ஊடகவியலாளர்கள் தமது பணிகளை சுதந்திரமாக செய்யமுடியவில்லை.

கடந்த காலங்களில் ஊடகவியலாளர்கள் பலர் திட்டமிட்டு கொலை செய்யப்பட்டனர்.

மட்டக்களப்பின் செய்தியாளர்கள் இன்று பாதுகாப்பற்ற சூழ்நிலையில் பணியாற்றிக்கொண்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

கடந்த வாரத்தில் செய்தியாளர்கள் அச்சுறுத்தப்பட்டமை தொடர்பில் எவரும் கைதுசெய்யப்படவில்லை.

பிரகீத் எக்னெலிகொட, லசந்த விக்கிரமதுங்க சுப்பிரமணியம் சுகிர்தராஜா ஆகியோர் இலங்கையின் படையினரால் கொல்லப்பட்டதாக சந்தேகிக்கப்படுகிறது.

இதில் சுகிர்தராஜா 2006ஆம் ஆண்டு ஜனவரி 24ஆம் திகதியன்று பணிக்காக சென்றுக்கொண்டிருக்கையில் சுட்டு;க்கொல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Related posts