அவுஸ்திரேலியாவை ஊதி தள்ளி.. உலகக் கோப்பை அரையிறுதிக்கு முன்னேறியது இந்தியா!

தென் ஆப்பரிக்காவில் நடைபெற்று வரும் ஐசிசி-யின் 19 வயதிற்கு உட்பட்டவர்களுக்கான 50 ஓவர் உலகக் கோப்பை தொடரின் காலிறுதியில் அவுஸ்திரேலியாவை வென்று இந்திய அணி அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது.

ஜனவரி 28ம் திகதி போச்சேபிஸ்ட்ரூமில் உள்ள மைதானத்தில் நடந்த காலிறுதி போட்டியில் இந்தியா-அவுஸ்திரேலியா அணிகள் மோதின.

நாணய சுழற்சியில் வென்ற அவுஸ்திரேலிய அணி முதலில் பந்து வீச முடிவு செய்தது. அதன் படி முதலில் களமிறங்கி துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 50 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 233 ஓட்டங்கள் எடுத்தது.

இந்திய அணி தரப்பில் அதிகபட்சமான ஆரம்ப துடுப்பாட்டகாரர் ஜெய்ஸ்வால் 62 ஓட்டங்கள் எடுத்தார். அவுஸ்திரேலிய தரப்பில் கெல்லி, மர்பி தலா இரண்டு விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

234 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய அவுஸ்திரேலிய அணி 159 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து படுதோல்வியடைந்தது. அதிகட்சமாக அவுஸ்திரேலிய ஆரம்ப துடுப்பாட்டகாரர் பான்னிங் 75 ஓட்டங்கள் எடுத்தார்.

Related posts