வைத்தியசாலை மாடியில் இருந்து குதித்து குடும்பஸ்தர் தற்கொலை…!

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் புற்றுநோய் வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்றுவந்த குடும்பஸ்தர் மாடியில் இருந்து குதித்து உயிரிழந்துள்ளதாக மட்டக்களப்பு பொலிஸார் தெரிவித்தனர்.

மட்டக்களப்பு புற்றுநோய் வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்றுவந்த வாழைச்சேனை, கருணைபுரத்தைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தையான சின்னத்துரை பிள்ளையான் (64வயது) என்பவரே இவ்வாறு குதித்து உயிரிழந்துள்ளார்.

இவர் கடந்த ஒன்பது வருடங்களாக புற்றுநோயினால் பாதிக்கப்பட்டுள்ளதுடன், தொடர்ந்து சிகிச்சை பெற்றுவந்துள்ளதாகவும் உறவினர்கள் தெரிவித்தனர்.

மரண விசாரணைகளைத் தொடர்ந்து சடலம் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

குறித்த நபர் தற்கொலை செய்து கொண்டாரா என்பது தொடர்பான விசாரணைகளை மட்டக்களப்பு பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Related posts