புதிய அரசாங்கம் பொறுப்பேற்ற பின் முதல்தடவையாக பிரதமர் நேர கேள்விகளுக்கு முகங்கொடுக்கவுள்ள மஹிந்த

புதிய அரசாங்கம் பொறுப்பேற்ற பின் நாடாளுமன்றில் முதல் தடவையாக பிரதமர் மஹிந்த ராஜபக்ச பிரதமர் நேர கேள்விகளுக்கு முகங்கொடுக்கவுள்ளார்.

அடுத்த வாரத்தில் இந்த நேரம் ஒதுக்கப்படவுள்ளதாக தெரியவருகிறது.

இதன்படி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு தமது கேள்விகளை தொடுக்க அரை மணித்தியாலம் ஒதுக்கப்படும்.

இதன்போது உறுப்பினர்கள் தமது கேள்விகளை நேரடியாகவே பிரதமரிடம் கேட்க முடியும்.

கடந்த அரசாங்க காலத்தில் 2016ஆம் ஆண்டு இந்த திட்டம் நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டது.

பிரதமர் கேள்வி நேரம் நாடாளுமன்ற வாராந்த அமர்வின்போது புதன்கிழமைகளில் ஒதுக்கப்படும்.

ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் நான்கு கேள்விகளையே கேட்க முடியும் இந்த நடைமுறை பிரித்தானியாவிலும் உள்ளது.

எனினும் அங்கு கேள்விகள் முன்கூட்டியே பிரதமருக்கு அனுப்பப்படாமல் நேரடியாகவே அந்த இடத்தில் கேட்கப்படும் வழக்கம் இருந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts