தனுஷ் நடிக்கும் கர்ணன் பட போஸ்டர் வெளியீடு

மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்து வரும் கர்ணன் படத்தின் படப்பிடிப்பு போஸ்டர் ஒன்று வெளியாகியுள்ளது.
பரியேறும் பெருமாள் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கவனத்தை ஈர்த்தவர் இயக்குநர் மாரி செல்வராஜ். பரியேறும் பெருமாள் படத்தில் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்தது. இயக்குநர் மாரி செல்வராஜ் தற்போது நடிகர் தனுஷுடன் இணைந்து கர்ணன் படத்தினை எடுத்து வருகிறார். தனுஷ் – மாரி செல்வராஜ் கூட்டணி மீது ஒருவித எதிர்பார்ப்பு உள்ளது.

இந்நிலையில், தனுஷ் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் கர்ணன் படம் தொடர்பாக போஸ்டர் ஒன்றினை பதிவிட்டுள்ளார். கர்ணன் படப்பிடிப்பு நடைபெற்று வருவதாக அதில் குறிப்பிட்டுள்ளார். போஸ்டரில் கல் பாறை ஒன்றின் மீது இளைஞர் ஒருவர் கையில் வாளுடன் நின்று கொண்டிருக்கிறார். அவரின் முகம் காட்டப்படவில்லை. அது தனுஷ் என்ற தெரிகிறது.

தனுஷ் நடிப்பில் வெளியான அசுரன் படம் நூறு நாட்களுக்கு மேல் திரையரங்குகளில் ஓடி வெற்றி பெற்றது. அதேபோல், பொங்கல் பண்டிகைக்கு வெளியான பட்டாஸ் படத்திற்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்தன. இந்த நிலையில், கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ஒரு படத்திலும், மாரிசெல்வராஜ் இயக்கத்தில் கர்ணன் படத்திலும் தனுஷ் நடித்து வருகிறார்.

Related posts