சீன நாட்டினருக்கான விசா வழங்கும் நடவடிக்கை தற்காலிகமாக இடைநிறுத்தம்

கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், சீன நாட்டினருக்கான விசா வழங்கும் நடவடிக்கையில் அரசாங்கம் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

அதன்படி சீன நாட்டிலிருந்து நாட்டிற்கு வருகை தருவதற்கு விசா வழங்கும் நடவடிக்கையை அரசாங்கம் தற்காலிகமாக நிறுத்தியுள்ளது.

எனினும் இலங்கையில் உள்ள சீன நாட்டவர்கள் அவர்களது நாட்டிற்கு செல்வதில் எந்த கட்டுப்பாடுகளும் விதிக்கப்படவில்லை.

சீனாவில் கொரோனா வைரஸ் தாக்கத்துக்கு உள்ளாகி இதுவரையில் 106 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அத்தோடு 4515 பேர் பாதிக்கப்பட்டுள்ளனரெனவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related posts