கருணை மனு மீதான நடவடிக்கையை விரைவு

முன்னாள் பிரதமர் ராஜிவ் கொலை வழக்கில் சிறையில் உள்ள பேரறிவாளன் தனது கருணை மனு குறித்த நடவடிக்கையை விரைவுபடுத்துமாறு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்துக்கு நினைவூட்டல் மனு அனுப்பியுள்ளார்.

கடந்த 25-ம் தேதி அனுப்பியுள்ள அந்த மனுவில் அரசியலமைப்புச் சட்ட விதி 161-ஐ பயன்படுத்தி குற்றவாளிகள் 7 பேரை விடுதலை தொடர்பாக ஆளுநர் முடிவு எடுக்கலாம் என்ற உச்சநீதிமன்ற உத்தரவையும், கடந்த 2018-ம் ஆண்டு செப்டம்பர் 9-ம் தேதி தமிழக அமைச்சரவை அளித்த பரிந்துரையையும் அவர் ஆளுநருக்கு சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், இந்த வழக்கில், அப்போதைய சிபிஐ காவல் கண்காணிப்பாளர் தியாகராஜனின் விசாரணை அறிக்கை பிரமாணப்பத்திரத்தில் சேர்க்கப்படாததையும் அவர் ஆளுநருக்கு சுட்டிக்காட்டியுள்ளார்.

கருணை மனு மீதான நடவடிக்கையை விரைவு பலமுறை நினைவூட்டல் மனு அனுப்பியும் ஆளுநரிடம் இருந்து எந்தவிதமான பதிலும் கிடைக்காதது வேதனையளிப்பதாகவும் பேரறிவாளன் தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

Related posts