இலங்கையில் பரவும் கொரோனா வைரஸ்

இலங்கையில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதாக சந்தேகிக்கப்படும் நபர்களின் இரத்த மாதிரிகளை ஹொங்கொங்கில் உள்ள ஆய்வத்திற்கு அனுப்புவதற்கான நடவடிக்களை சுகாதார அமைச்சு மேற்கொண்டுள்ளது.

அத்துடன் இவ்வாறு அனுப்பப்படும் இரத்த மாதிரிகளின் முடிவுகளை ஒரு நாளுக்குள் பெறவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக சுகாதார அமைச்சின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

கொரோனா வைரஸ் தொடர்பாக ஆராய ஹொங்கொங்கில் அதிக வசதிகள் உள்ளமையினால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

கொரோனா வைரஸ் ஆய்வக சோதனைகளுக்குத் தேவையான உபகரணங்கள் மற்றும் இரசாயனப் பொருட்களை இலங்கைக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

Related posts