வலிமை படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு சுவிட்சர்லாந்தில்?

தல அஜித் நடித்து வரும் ’வலிமை’ திரைப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் முடிவடைந்தது இதனை அடுத்து இரண்டாம் கட்ட படப்பிடிப்பு சென்னையில் சமீபத்தில் முடிவடைந்தது என்பதை பார்த்தோம்.


இந்த நிலையில் ’வலிமை’ படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு வட இந்தியாவில் நடைபெற இருப்பதாகவும் இதற்கான ஏற்பாடுகள் தற்போது நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.


இந்த நிலையில் வரும் ஏப்ரல் மாதம் முதல் இந்த படத்தின் படப்பிடிப்பு சுவிட்சர்லாந்து நாட்டில் நடைபெற இருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளது. இந்த படத்தில் மோட்டார் ரேஸ் மற்றும் கார் ரேஸ் ஆகிய இரண்டு விறுவிறுப்பான ரேஸ் காட்சிகள் இருப்பதால் அந்த காட்சிகளை சுவிட்சர்லாந்தில் படமாக்க படக்குழு முடிவு செய்துள்ளதுஇதற்காக ஒரு டீமை தயாரிப்பாளர் போனிகபூர் சுவிஸ் நாட்டுக்கு அனுப்பியுள்ளதாகவும், அவர்கள் ரேஸ் காட்சிகளுக்கான அனுப்ப அனுமதி கேட்பது உள்பட மற்ற பணிகளை செய்ய செய்து வருவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது. மேலும் தமிழ் சினிமாவில் இதுவரை இல்லாத அளவில் இந்த இரண்டு ரேஸ் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது .

Related posts