பிரித்தானியாவின் புதிய நாணயம் அறிமுகம்

ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரித்தானியா வெளியேறுவதை முன்னிட்டு பிரித்தானிய அரசாங்கத்தினால் புதிய நாணய  குற்றி  ஒன்று  வெளியிடப்பட்டுள்ளது. 

50 பென்ஸ் (pence) மதிப்பிலான  நாணய குற்றி  ‘அமைதி, செழிப்பு மற்றும் அனைத்து நாடுகளுடனான நட்பு’எனும் தொனிப்பொருளில், 2020  ஜனவரி 31 எனும் திகதி குறிப்பிடப்பட்டு   நேற்று வெளியிடப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன..  

அத்துடன்  சுமார் மூன்று மில்லியன் புதியநாணயங்கள் எதிர்வரும் 31 ஆம் திகதி  முதல் விநியோகிக்கப்படஉள்ளதுடன், மேலும் ஏழு மில்லியன் நாணயங்கள் இந்த வருட பிற்பகுதியில் வெளியிடப்படவுள்ளதாக பிரித்தானிய அரசாங்கம் தெரிவித்துள்ளது. 

இதேவேளை, ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு வெளியேறுவது தமது வரலாற்றில் புதிய திருப்புமுனைஎனவும்,வெளியிடப்பட்டுள்ள  நாணயகுற்றி புதியஅத்தியாயத்தின் தொடக்கத்தைக் குறிப்பதாகவும் பிரித்தானிய நிதிஅமைச்சர் தெரிவித்துள்ளமைகுறிப்பிடத்தக்கது. . 

Related posts