பங்கசுக்கள் தொடர்பாக வெளியான புதிய தகவல்

பூஞ்சணங்களை உருவாக்கும் பங்கசுக்கள் தொடர்பாக இதுவரை காணப்பட்டுவந்த தகவல் ஒன்று தற்போது பொய்ப்பிக்கப்பட்டுள்ளது.

அதாவது பலரும் எண்ணுவது போன்று அல்லாது பங்கசுக்கள் மிகவும் பழமைவாய்ந்தவை என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதன்படி பங்கசுக்கள் சுமார் 715 மில்லியன் தொடக்கம் 810 மில்லியன் வருடங்கள் பழமைவாய்ந்தவை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெல்ஜியத்தில் உள்ள அருங்காட்சியகம் ஒன்றில் காணப்பட்ட பங்கசுக்களை ஆய்வுக்கு உட்படுத்தியபோதே இந்த புதிய தகவல் வெளியாகியுள்ளது.

இது பூமியில் உயிரினங்களின் சிக்கல்தன்மை தோற்றம் பெற்றுள்ள வரலாற்றிலும் புதிய தெளிவினை ஏற்படுத்தியுள்ளது.

Related posts