ஜனாதிபதி கோட்டாபயவுக்கும் பிரதமர் மஹிந்தவுக்கும் இடையில்?

ஐக்கிய தேசிய கட்சி தலைவர்கள் ஜனாதிபதி கோட்டாபயவையும், பிரதமர் மஹிந்தவையும் பிரிக்க முயற்சிப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இருவருக்கும் இடையில் மோதல் ஏற்பட்டுள்ளதாக போலிg; பிரச்சாரங்கள் முன்னெடுக்கப்படுகின்றது. அவ்வாறான நடவடிக்கை ஊடாக கோட்டாபய – மஹிந்தவை பிரிக்க முடியாது.

கோட்டாபய நல்லவர் எனவும் மஹிந்த கெட்டவர் என எதிர் தரப்பினர் தெரிவித்துள்ளனர். ஜனாதிபதி தேர்தல் சந்தர்ப்பத்தில் கோட்டாபய கெட்டவர் மஹிந்த நல்லவர் என கூறினார்கள்.

கோட்டாபயவுக்கு அமெரிக்க கடவுr;சீட்டு உள்ளதாக கூறிய சஜித் இன்று அது குறித்து வாய் திறப்பதே இல்லை. கோட்டாபயவுடன் வேலை செய்ய தயார் என சஜித் கூறுகின்றார்.

கோட்டாபயவின் அடுத்த நான்கரை வருட அரசாங்கத்தின் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ என்பதனை மக்கள் உறுதி செய்துள்ளனர்” என மக்கள் சந்திப்பு ஒன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

Related posts