சீனா தயாரித்த பயோ ஆயுதமாக கொரனா இருக்கலாம் – அதிர்ச்சி தகவல் கூறிய இஸ்ரேல் விஞ்ஞானி!

உலக நாடுகளுக்கு தெரியாமல் சீனா தயாரித்த பயோ ஆயுதமாக கொரனா இருக்கலாம் என இஸ்ரேல் விஞ்ஞானி ஒருவர் அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளார்.
கொரனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இதனால் வுஹான் உள்ளிட்ட 19 நகரங்களுக்கான போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. சீனாவில் மட்டும் 2 ஆயிரத்து 744 பேருக்கு கொரனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களில் 300 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதென மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

சீனா மட்டுமின்றி உலக நாடுகளையே அச்சுறுத்தியுள்ள கொரனா வைரஸ் குறித்து இஸ்ரேல் விஞ்ஞானி அதிர்ச்சி தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார். உலக நாடுகளுக்கு தெரியாமல் சீனா தயாரித்த பயோ ஆயுதமாக கொரனா இருக்கலாம் என அவர் சந்தேகம் தெரிவித்துள்ளார்.


தி வாஷிங்டன் டைம்ஸ் நாளிதழுக்கு பேட்டியளித்த உயிரியல் விஞ்ஞானியும், இஸ்ரேல் ராணுவத்தின் புலனாய்வுப் பிரிவு முன்னாள் அதிகாரியுமான டேனி ஷோஹம் இந்த அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளார். இது குறித்து தெரிவித்துள்ள அவர், உலக நாடுகளுக்கு எதிராக சீன அரசு மறைமுகமாக பயோ ஆய்வு கூடங்களை உருவாக்கி அதில் உயிர்களை கொல்லும் வைரஸ்களை உருவாக்கி வந்தது என்றும், இது உலக நாடுகளுக்கு தெரிந்து விளக்கம் கேட்டபோது சீன அரசு மறுத்ததாகவும் தெரிவித்துள்ளார். ஒரு ஆய்வுக் கட்டுரையின்படி இந்த தகவல்களை தான் தெரிந்துகொண்டதாகவும் அவர் கூறியுள்ளார்.

மேலும் கூறிய அவர், ”அப்படிப்பட்ட ஒரு வைரஸாக கொரனா இருக்கலாம். அங்கு பணிபுரியும் மருத்துவர்கள் மூலமாகவோ, அல்லது ஆய்வுக்கூட கசிவு காரணமாகவோ வைரஸ் பரவி இருக்கலாம் என சந்தேகிக்கிறேன். ஆனால் என்னிடம் சரியாக ஆதாரங்கள் இல்லை” என தெரிவித்துள்ளார்.

Related posts